மோட்டார் சைக்கிள் திருட்டு: பெண் ஒருவர் கைது
களனியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (19.11.2022) பதிவாகியுள்ளது.
களனி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி விஹாரை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கில் மீட்பு
இவ்வாறு களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் , மீகஹாவத்தை என்னும் இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த பெண் இன்று (20.11.2022) நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளமை கூறிப்பிடத்தக்கது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

தடைகளை மீறி ரஷ்யா பக்கம் சாயும் சுவிட்சர்லாந்து: சுவிஸ் நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கை News Lankasri
