தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென நுழைந்த மோட்டார் சைக்கிள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதியின்றி நுழைந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, மத்துகம வீதியிலிருந்து வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தொடம்கொட நெடுஞ்சாலை நுழைவாயிலில் மாத்தறை நோக்கி பிரவேசித்து, வெலிபன்ன நோக்கி செல்ல முற்பட்ட போது, நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், தொடங்கொடை நுழைவாயிலில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
வாகனமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில், நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் குறித்து பதிவாகியுள்ளது
இவ்வாறு கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர் அதிகளவில் மது அருந்தியிருந்ததாகவும், அவர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக தொடங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
