அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி
அமெரிக்காவில் நியூயோர்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று(17) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடந்த ஒரு சிறிய சண்டை துப்பாக்கிச் சூடாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மர்ம நபர்களை தேடும் பணி
சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
Multiple shooters wanted after 3 killed at Brooklyn lounge, NYPD says - CBS New York https://t.co/jgBulOpJLV
— S (@saabelieves) August 17, 2025
இறந்தவர்களில் மூவரும் ஆண்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் எட்டு பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, மர்ம நபர்களை தேடும் பணிகளில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



