லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
ஹட்டன் (Hatton) - நுவரெலியா பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (04) காலை கொட்டகலை- மேபீல்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதி கைது
கொட்டகலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், லொறி சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri