இலங்கையில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ள சலுகை
தூர பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குழுவிற்கு மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் வீடமைப்புத் தொகுதியிலிருந்து வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களது வீடுகளுக்கான அடிப்படை வீட்டு உபகரணங்களையும் கட்சி வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, இந்த வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர், அடுப்பு, மின் விசிறி போன்ற தளபாடங்களை கட்சியினால் வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களுக்கான சலுகை
அத்துடன், இதுவரை உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட பணத்தில் இருந்து இந்த பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அரசியல் கட்சி ஒன்று தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறை என இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
