மூதூரில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்
மூதூரில் எரிபொருள் நிரப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(27.4.2026)மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான ஐ.ஓ.சி (IOC) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் உரிமையாளர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, அங்கிருந்து புறப்பட முற்பட்ட போதே எதிர்பாராதவிதமாக இயந்திரப் பகுதியில் தீப்பற்றியுள்ளது.
தீ விபத்து
இருப்பினும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையிலிருந்த ஊழியர்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகச் செயற்பட்டு தீயை அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஊழியர்களின் இந்த வேகமான மற்றும் புத்திசாலித்தனமான செயற்பாட்டினால், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
ஊழியர்களின் இத்தகைய துரிதச் செயல்பாட்டிற்கு அந்தப் பகுதி மக்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திறைசேரியின் டொலர் கையாடல் குறித்து நாடாளுமன்றில் விவாதிக்க அரசு மறுப்பு!- எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri