அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு : எரிக்கப்பட்ட சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிள்
அண்மையில் அஹுங்கல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கொட, சுது வெலிபொத்த பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் எரிந்து கிடப்பதை காணியின் உரிமையாளர் அவதானித்து இன்று (10) காலை கொஸ்கொட பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, கொஸ்கொட பொலிஸார், எல்பிட்டிய குற்றத்தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மீட்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதாள குழு முரண்பாடு
54 வயதுடைய நபர் ஒருவரின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அஹுங்கல்லவில் நேற்று(09) இடம்பெற்றுள்ளது.
இரவு 7.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், தாக்குதலுக்கு உள்ளான நபரை அவரது வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த நபர் தென் மாகாணத்தில் பல்வேறு கொலைகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சந்தேகநபரான “பாபா” என அழைக்கப்படும் நபரின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனவே, “கொஸ்கொட சுஜீ” மற்றும் “ரத்கம விதுர” என அறியப்படும் பிரபலங்கள் தலைமையிலான தெற்கில் இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முரண்பாடுகளுடன் இந்தக் கொலைக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இறந்த நபருக்கு எந்தவிதமான முன் தண்டனையோ அல்லது குற்றப் பதிவுகளோ இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
