கன ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் படுகாயம்
திருகோணமலை கண்டி வீதி ஆண்டான்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை கணேஸ்லேன் உள் வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதுண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் பயணித்த மனைவி மற்றும் பிள்ளை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
டிப்பர் வாகனம் உள் வீதியிலிருந்து அதி வேகமாகப் பிரதான பாதையை அடைய முற்பட்டதினால் இவ்விபத்து ஏற்றப்பட்டிருப்பதாக உப்புவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் டிப்பர் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணையினை உப்புவேளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri