மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இளைஞர்கள் இருவர் பலி
நவரோஹல வீதியின் கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
கிம்புலாவல பிரதேசத்தில் இருந்து நவரோஹல திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் ஜயவர்தனபுர மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam