முல்லைத்தீவில் மோட்டார் சைக்கில் விபத்து: இருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர்உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குடும்பஸ்தர் பலி
குறித்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 அகவையுடைய திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கணுக்கேணி கிழக்கினை சேர்ந்த 41 அகவையுடைய கனகராசா நிமலன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் 11.04.2024 இன்று உடலம் பூதன்வயல் கற்பூரப்புல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது
இதற்கமைய இந்தவிபத்தில் காயமடைந்து யாழ். போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றைய குடும்பஸ்தரான கனகராசா நிமலன் நேற்று (11.04.2024) உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |