குருநாகலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
குருநாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதெனிய - அநுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின் போது, 41 வயதுடைய மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரது சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam