மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோக தடைகள் தொடர்பான பிரச்சினைகளின் விளைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சுமித் சி.கே.அழகோன் தெரிவித்தார்.
எனவே, இந்த திணைக்கள அதிகாரிகள் பொது மற்றும்/அல்லது தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் திணைக்களம்
இதன்படி, ஜூன் 27 ஆம் திகதி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம், வெள்ளிக்கிழமைகளில் திணைக்களத்தை திறப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

வேலை நாட்களில் முற்பகல 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொலைபேசி எண்கள் மூலம் சேவைகள் தொடர்பான எந்த விளக்கத்திற்கும் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வாகனப் பதிவுகள் மற்றும் உரிமம் மாற்றங்களுக்கு - 070 7 677 877 என்ற
இலக்கத்துடனும், ஓட்டுநர் உரிமங்களுக்கு, - 070 7 677 977 என்ற இலக்கத்துடனும்
தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri