வாகன விற்பனை தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT), "திறந்த பத்திரங்கள்" (Open Papers) அல்லது முறையான ஆவணப்பகிர்வு இன்றி வாகனங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்ர்டன், வாகன உரிமையாளர்கள் முறையான ஆவண நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.
மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையர் நாயகமும், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷலுமான துஷாரா இந்துனில் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
வாகனத்தை மாற்றுபவர் மற்றும் பெறுபவர்
மேலும், வாகனத்தை மாற்றுபவர் மற்றும் பெறுபவர் இருவரும் MTA 6 படிவத்தில் கையொப்பமிட்டு, அதன் உரிய நகலை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதையும், மோசடி நடைமுறைகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.
சட்டவிரோத செயல்களுக்காக வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அதிகாரப்பூர்வ வாகன உரிமை மாற்ற செயல்முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan