விவாதத்திற்கு வரும் கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
சுகாதார அமைச்சர் மீது இலங்கை நாடாளுமன்றத்தினால் நம்பிக்கையில்லா பிரேரணை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் செப்டெம்பர் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றம்
இவ்விடயத்தினை இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமே தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகார குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.09.2023) மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேவேளை நாடாளுமன்றம் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடவுள்ளாதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
