முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான பிரேரணையில் தமிழ் எம்.பிக்களின் மௌனம்: எழுந்துள்ள விமர்சனம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஜனாதிபதிகள், சிறப்புரிமைகளின் கீழ் மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவதை தடுக்கும் பிரேரணை, நாடாளுமன்றத்தில் அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
இறைமை
இதேவேளை, வடக்கு கிழக்கு தமிழ் மக்களை கடந்த கால ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் இனபடுகொலை புரிந்துள்ளதுடன் அதற்கான நியாயம் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது, அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டியது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் இறைமையாகும்.
ஆனால், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்க வேண்டும் என வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி மிக உச்சகட்டத்துக்கு வந்துள்ளது. எனவே தமிழ் பிரதிநிதிகள் பதில் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 18 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
