வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் தாய்மார்களுக்கு விதிக்கப்பட்ட தடை- செய்திகளின் தொகுப்பு
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்று நிரூபமும் வேலை வாய்ப்பு பணியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் போது தாய்மார்கள், தங்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றனர், இல்லை என்பதையும் அல்லது இரண்டு வயதுக்கு மேற்பட்ட அல்லது 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ளதாகவும், அந்த பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சத்தியக்கடதாசியொன்று வழங்க வேண்டும்.
அந்த சத்தியக்கடதாசியானது, தமது பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவாக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பகல் நேர செய்திகளின் தொகுப்பு,




