மாறுவேடத்தில் செவ்வந்தி! விசாரணைகளில் தாயார் வெளியிட்ட தகவல்
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தொடர்பிலான விசாரணையில் அவரது தாயார் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
இஷாராவின் தாயார் கடைசியாக தனது மகளை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் சிசிரிவி காட்சிகளில் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு பார்த்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரான பெண், தொடர்பில் பல முக்கிய தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சட்டத்தரணி போல் மாறுவேடம்
சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கியைக் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் இஷாரா தொடர்பிலேயே இந்த தகவள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த இருபத்தி ஆறு வயதுடைய இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற குறித்த பெண்ணைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரி அவரின் புகைப்படத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
அவர் பாதாள உலக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய நபர் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது குடும்ப பின்னணியை முழுமையாக விசாரித்ததில், அவரது கணவர் தற்போது சிறையில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு, துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இஷாரா செவ்வந்தியின் கணவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹெரோயின் கடத்தல்
மேலும், அவரது சகோதரர்களில் ஒருவர் கடந்த ஆண்டு கட்டான பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி வசந்த சுதசிங்க தலைமையிலான குழுவினரால் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் மேலும் தெரியவந்ததாவது, அந்தப் பெண் ஜனவரி 24, 2024 அன்று வெளிநாடு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தனக்கு நெருக்கமான நபர் ஒருவருடன் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இஷாராவின் தாயார் கடைசியாக தனது மகளை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் சிசிரிவி காட்சிகளில் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு பார்த்ததாக பொலிஸாரிடம் தெரிவத்துள்ளார்.
பொலிஸ் வட்டார தகவல்
இந்நிலையில் பொலிஸ் வட்டார தகவல்களின்படி, இந்தப் பெண், தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள கெஹல்பத்தர பட்மே என்ற பாதாள உலகக் கும்பல் தலைவரின் அமைப்பின் நெருங்கிய உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
இந்த கும்பலில் போதைப்பொருள் கடத்தலுடன், துப்பாக்கி கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடல் வழியாக நாட்டை விட்டு இஷாரா வெளியேறுவார் என்ற சந்தேகத்தின் பேரில் அதனை தடுக்க பொலிஸார் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திட்டமிடப்பட்ட கொலையின் அனைத்து விபரங்களும் விரைவில் வெளியாகும் என்று பொலிஸ் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவவில்லையென்றாலும் நாம் உதவவேண்டும்: பிரித்தானிய முன்னாள் ராணுவத் தளபதி News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஷாலினி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா? வைரலாகும் போட்டோ Cineulagam
