பிறந்த குழந்தையை கடத்த முயன்ற கும்பலை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்
புத்தளத்தில் 19 நாட்கள் வயதான குழந்தையொன்றை ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஆனமடுவ - ஆடிகம பகுதியில் வைத்து புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குழந்தையை ஏற்றிச் செல்வதற்காக வந்ததாக கூறப்படும் வாகனம் ஒன்றையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
குழந்தை விற்பனை
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் குழந்தையின் தாய், அவரது மூத்த சகோதரன், அந்த சகோதரனின் மனைவி, குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற தம்பதியினருடன், வாகன சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை விற்க முயன்ற தாயும் அவரது சகோதரனும் ஆனமடுவ - ஆடிகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகுழந்தையை விலைக்கு வாங்க முயன்ற தம்பதியினர் கற்பிட்டி - மாம்புரி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குழந்தையை அழைத்துச் செல்ல வந்த வாகன சாரதி புத்தளம் – பாலாவி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த குழந்தை விற்பனைக்கான இடைத்தரகர் வேலைகளை வைத்தியர் ஒருவர் மேற்கொண்டுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வாகனம் ஆகியன மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.