ஐந்து வயது மகனை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்: நீதிமன்றத்தின் உத்தரவு
வத்தளை, ஹெந்தலை - கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரைத் துறக்க முயன்ற தாய் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று(16) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்

வத்தளை, ஹெந்தலை - கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரை துறக்க முயன்ற குறித்த பெண் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த பெண் நேற்றிரவு 7.30 மணியளவில் தனது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
கைது

இதையடுத்து, அவர் ஹெந்தலை காவலரணில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் வத்தளை பொலிஸாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க படகுகள் மூலம்
கடற்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam