யாழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு
யாழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயாரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை - சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி (வயது 28) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பிரசவித்தார்.

இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில் தாயார் தொடர்ச்சியாக மயக்கத்தில் இருந்ததால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம்
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

மரணத்திற்கான காரணம் தெரிய வராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri