மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயார்: பொதுமன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

Sri Lanka Police Jaffna Death Penalty Death
By Theepan Nov 24, 2023 10:39 AM GMT
Report

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதிக்கான குறித்த கோரிக்கை கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை முற்பகல் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரலால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் சார்பில் ஆளுநர் செயலக மக்கள் தொடர்பு அதிகாரி குறித்த கோரிக்கை கடிதத்தினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

14 ஆண்டு சிறைவாசம்

குறித்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயார்: பொதுமன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை | Mother Of 2 Children Facing Death Penalty

ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை கடிதம் வருமாறு, 14ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பின்பு, மரணதண்டணையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான தமிழ் அரசியல் கைதி தொடர்பானது.

மேற்படி, இல.6/3, கன்னாதிட்டி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியை வாழ்விடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலா என்பவர் 14 ஆண்டு காலம் தமிழ் அரசியல் கைதியாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தினூடாக விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேல்முறையீடு காரணமாக இப்பெண்மணி மீண்டும் மரணதண்டணையை எதிர்நோக்கியுள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம்: ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும் - இஸ்ரேல் பிரதமர்

காசாவில் போர் நிறுத்தம்: ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும் - இஸ்ரேல் பிரதமர்

அதாவது, 2004ம் ஆண்டு இடம் பெற்ற, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் முன்பள்ளி ஆசிரியையான குடும்பத் தலைவி செ.சத்தியலீலா என்பவர் அவசரகாலச் சட்டவிதியின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர், சுமார் 14 ஆண்டுகள் இருந்தபடி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து கடந்த ஜனவரி 14, 2018 அன்று கொழும்பு மேல் நீதி மன்றினால் “15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டணையுடன் சேர்த்து 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்கின்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

மின்கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

மரண தண்டணை

இந்த நிலையில், மேல்நீதிமன்றம் வழங்கிய இவ்வழக்குத் தீர்ப்பில் திருப்தியுறாத சட்டமா அதிபர் அதனை ஆட்சேபித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதற்கமைய மேல்முறையீட்டு நீதிமன்றம் செ.சத்தியலீலா என்பவருக்கு ஜனவரி 23, 2023 அன்று மரணதண்டணை தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயார்: பொதுமன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை | Mother Of 2 Children Facing Death Penalty

நிரந்தர வருமானமின்மையால் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் சத்தியலீலாவால் தனக்கென ஒரு சட்டத்தரணியை அமர்த்துவதில் கூட மிகச்சிரமப்படுகிறார். இவ்வாறான நிலையில்தான் இவர், இறுதி முயற்சியாக இலங்கை உயர் நீதிமன்றத்தின் வாசலை ஏகியிருக்கிறார்.

கௌரவ ஜனாதிபதியாகிய தாங்கள், சமூகங்களுக்கிடையிலான நல்லெண்ண சமிக்கையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட இன்னபிற விடயங்களிலும் கரிசனைகொள்வதாக நம்பப்படுகிறது. இதேநேரம், அரச இயந்திரங்களின் செயற்பாடுகளோமுற்றிலும் மாறாக இருப்பது கவலையளிக்கிறது. இவ்வழக்குடன் சம்பந்தபட்ட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, சந்தேகநபரான “செ.சத்தியலீலாவை வழக்கிலிருந்து விடுவிப்பது தொடர்பில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என்று, திறந்த மேல் நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவித்திருந்த நிலையிலும் கூட இப்பெண்மணி இன்று சாவுத்தண்டணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

திருமணத்திற்கு சென்ற யுவதி ஒருவர் விபத்தில் பலி

திருமணத்திற்கு சென்ற யுவதி ஒருவர் விபத்தில் பலி

பொது மன்னிப்பை

ஆகவே, “14 வருடங்களாகக் குடும்பம், பிள்ளைகள், பெற்றோர், உறவுகள் என அனைவரையும் பிரிந்து சிறைக்குள் சொல்லொனா துன்பங்களை அனுபவித்துவிட்டு விடுதலையாகி வெளியில் வந்த பின்பும் ஒரு மரணதண்டணை கைதியாக மீண்டும் சிறை செல்வதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.

அதற்கு, உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் இந்த பெண்மணிக்கு ஏதேனுமோர் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் பொது மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துதவுமாறு கௌரவ ஜனாதிபதி அவர்களை, ஒரு சுயாதீன மனிதநேய அமைப்பாக நாம் கேட்டு நின்கின்றோம் என்றுள்ளது.

மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயார்: பொதுமன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை | Mother Of 2 Children Facing Death Penalty

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US