யாழ். வடமராட்சியில் பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்
யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாயில் பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (27.06.2024) இடம்பெற்றுள்ளது.
கொடுக்குளாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு-புனிதசோதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் சம்பவ தினமன்று காலை வீட்டின் நிலப்பகுதியை துப்பரவு செய்து கொண்டிருந்தவேளை பனை ஓலைக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாகவும் சம்பவ இடத்திலையே அவர் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri
