வடக்கு கிழக்கின் பல பகுதியில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video)

Batticaloa Jaffna Mannar University of Jaffna
By Theepan Apr 19, 2023 11:21 AM GMT
Report

இலங்கையிலிருந்து இந்திய படையினை வெளியேறக்கோரியும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி வடக்கு கிழக்கின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்னைபூபதியின் குடும்ப உறவுகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை கொண்ட ஏற்பாட்டுக்குழுவால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கின் பல பகுதியில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video) | Mother Bhupathi Memorial Day In The Tamil Area

இதை முன்னிட்டு இன்று (19.04.2023) மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். 

மட்டக்களப்பு செய்தி- ஆஷிக்

யாழ். பல்கலைக்கழகம்

யாழ். பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையிலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது அன்னை பூபதியின் உருவபடத்திற்கு ஈகை சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு அன்னைபூபதியின் நினைவுரையும் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கின் பல பகுதியில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video) | Mother Bhupathi Memorial Day In The Tamil Area

இந்த நினைவேந்தலில்  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சிவ்வெஸ்டார் ஜெல்சின், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்.நல்லூர்

யாழ். நல்லூரில் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் காலையில் ஆரம்பமாகியிருந்தது. 


தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியும் எனவும், அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மன்னார்

இலங்கை தமிழரசு கட்சி மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தியாக தீபம் அன்னை பூபதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்போது கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கின் பல பகுதியில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video) | Mother Bhupathi Memorial Day In The Tamil Area

இதேவேளை தியாக தீபம் அன்னை பூபதி நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர்,உப தவிசாளர், உறுப்பினர்கள் மத தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.   

மன்னார் செய்தி- சான்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டுப்பிரதேசத்தில் நீலன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வும் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு செய்தி- கீதன்

கிளிநொச்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவேந்தல் தொடர்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது கிளிநொச்சி சேவைச் சந்தைக்கு முன்பாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தி- யது

யாழ்ப்பாணம்

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் -தீபன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US