பதுளையில் தாயும் மகளும் கொலை
பதுளை கெனல்ஜீன் தோட்டத்தின் ஹிரங்குருகம பிரதேசத்தில் பெண்ணும் அவரது மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே வீட்டில் வசித்த பெண்கள் மீது தாக்குதல்

கொல்லப்பட்டவர்களான பெண்ணும் அவரது மகளும் தோட்டத்தில் உள்ள வீட்டுத் தொகுதியில் வசித்து வந்துள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 83 வயதான பெண்ணும் 55 வயதான அவரது மகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்துள்ள 62 வயதான 83 வயதான பெண்ணின் மற்றுமொரு மகள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan