நீரில் மூழ்கி ஒருவர் மரணம்! - தாய் மற்றும் மகள் மாயம்
பேராதனை, களுகமுவ பகுதியில் மகாவலி ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் இரண்டு வயது குழந்தை உட்பட இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) மாலை ஆற்றில் குளித்த ஐவர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒரு சிறுவன் உட்பட இருவரை பிரதேசவாசிகள் காப்பாற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். 20 வயதுடைய பெண் மற்றும் அவரது இரண்டு வயது மகள் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கண்டி, மாபானாவத்துர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் உயிர்காப்புப் படையினர், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
