யாழில் தாய்க்கும், பச்சிளம் குழந்தைக்கும் நடந்த கொடூரம் - பொலிஸார் தீவிர விசாரணை (Photo)
யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தாயும், குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையில் வாய்த்தர்க்கம்
கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்பு மனைவியையும் குழந்தையும் காணாது கணவன் தேடியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாயின் சடலமும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கணவன் கைது
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் தாயான சந்திரமதி (வயது 40) என்ற பெண்ணும், பிரகாஷ் காருண்யா (7 மாதம்) என்ற குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
