இளம் தாயொருவர் பாம்பு தீண்டியமையால் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் தாயொருவர் பாம்பு தீண்டியதில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(16) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் 24 வயதுடைய தாயொருவரையே பாம்பு தீண்டியுள்ளது.
பேராறு பகுதியில் தனது வீட்டு வளவினுள் துப்பரவு பணிகளைச் செய்த வேளை பாம்பு தீண்டியுள்ளது.
என்ன பாம்பு தீண்டியது என்பது சரியாகத் தெரியாது எனவும் கால்கள் வீங்கி
விட்டதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை பொலிஸார் கூறியுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam