எனது சம்மதம் இன்றி எனது கட்சியின் பெயருக்கு யாரும் பணம் வழங்க வேண்டாம்!சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்

Sri Lanka Politician Sri Lankan political crisis C. V. Vigneswaran
By Theepan Mar 01, 2023 10:17 PM GMT
Report

போலியாக தனது பெயரையும் கட்சியினையும் பயன்படுத்தி சில நாட்களாக வெளிநாடுகளில் பணம் சேகரிக்கும் சம்பவம் இடம்பெறுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் அதன் செயலாளர் நாயகம் ஆகிய எனக்கு தெரிவிக்காது எனது சம்மதத்தையும் பெறாது வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

நிதி சேகரிப்பில் சிலர் 

எனது சம்மதம் இன்றி எனது கட்சியின் பெயருக்கு யாரும் பணம் வழங்க வேண்டாம்!சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் | Most In Fundraising Keeping Vigneswaran Crisis

நானோ எனது கட்சியோ, எமது கட்சி உறுப்பினர்களோ இது பற்றி எந்த வித நிதி சேகரிப்பிலும் இறங்கும் படி எவரையும் கோரவில்லை.

எனது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இத்தால் இதனைத் தெரியப்படுத்தி இவ்வாறாகப் பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எவரும் பங்களிப்பு எதையும் வழங்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நிதி சேகரிப்பானது இலங்கையிலிருக்கும் சிலரின் ஆதரவுடன் தமது சொந்த நலன்களுக்காகக் கூட இடம்பெறக்கூடும்.

அப்படி யாராவது எமது கட்சியின் சார்பில் ஆதரவு மேலீட்டால் செயற்பட்டுவரின் அவர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அரசியல் கட்சிகளின் நிதி அறிக்கைகள் வருடா வருடம் தேர்தல் ஆணையாளருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் தவறாது அனுப்பப்பட வேண்டும். சென்ற ஆண்டுக்கான அறிக்கையை அனுப்புமாறு ஆணைக்குழு இப்பொழுது கோரியிருக்கின்றது.அவ் அறிக்கைளை இப்பொழுது நாம் தயாரித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நன்கொடைகளைக் கோரியுள்ளோம்

அப்படி இருக்கையில் இக் கணக்கு அறிக்கைகளில் காட்டப்படாது நிதி சேகரிக்கப்பட்டு செலவழிக்கப்படாது இருப்பதையோ அல்லது அந் நிதி எமது கட்சி சார்பில் செலவு செய்தமைக்கு அத்தாட்சியையோ பெற்று அது நிரூபிக்கப்பட்டால் கட்சியின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுவது மட்டுமன்றி பொய்யான கணக்கறிக்கைகளை தயாரித்து அனுப்பியமைக்காக கட்சியின் பதிவைக்கூட இரத்துச் செய்வதற்கு இடமிருக்கின்றது.

எனவே தயவு கூர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் எமக்கு தெரியாமல் ஈடுபட வேண்டாமென வெளிநாடுகளிலும் இலங்கையிலும் இருக்கும் அன்பான ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் தயவுடன் வேண்டி நிற்கின்றேன்.

நாங்கள் ஏற்கனவே வங்கி கணக்கு விபரங்களுடன் எம் மக்களிடம் இருந்து நன்கொடைகளைக் கோரியுள்ளோம். அதன் படி நன்கொடைகள் குறித்த வங்கிக்கணக்கிற்குப் போடப்பட்டால் உரிய பற்றுச்சீட்டுகள் அனுப்பப்படுவன.

எமது சார்பில் என்று கருதி தனிப்பட்டவர்களுக்குக் கூட பணத்தைக் கொடுப்பதை என் தமிழ் உறவுகள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.    

GalleryGallery
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US