கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் அதிகளவில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்
கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 245 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இதில் வௌ்ளவத்தையில் 48பேரும், வெல்லம்பிட்டியில் 42 பேரும் கண்டறியப்பட்டார்கள். கொள்ளுப்பிட்டியில் 17 பேரும், கிராண்ட்பாசில் 15 பேரும், கிருலப்பனை மற்றும் மட்டக்குளியில் 13 பேரும், ஹல்ஸ்டொப்பில் 10 பேரும் கண்டறியப்பட்டார்கள்.
கம்பஹாவில் மொத்தமாக 66 பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டனர். வியாங்கொடையில் 17 பேரும், நீர்கொழும்பில் 16 ரேும் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.
இதேவேளை இலங்கையில் நேற்று 588 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.
நேற்று மாத்திரம் 13,853 பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதுவரையான காலத்தில் 39,230 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.8478 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30,507 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமாகியுள்ளார்கள்.
இதுவரையில் 185 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.இதில் 172 பேர் கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் மரணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.