இலங்கை நாடாளுமன்றுக்குள் மிக ஆபத்தான பொருட்கள்! முக்கிய செய்திகளின் தொகுப்பு
எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவர முயன்ற ஆபத்தான பொருட்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவர முயன்ற பல பொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றுள் ஆபத்தான பொருட்களும் உள்ளன. இதனால் சபையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்ச்சையின் போது குழப்ப நிலை ஏற்பட்டது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan