பொகவந்தலாவையில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
பொகவந்தலாவ பொதுசுகாதார வைத்திய பிரிவு மற்றும் அம்பகமுவ பொதுசுகாதார வைத்திய பிரிவுகளுக்குட்பட்ட பகுதியில் 57 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ சுகாதாரப் பிரிவில் நேற்று (29.06.2021) வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் படி 42 பேரும் அம்பகமுவ பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் சமனலகம, அட்டன் சுற்றுப்புற வீதி, புறுட் ஹில், கந்தையா கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் 15 பேரும் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஹட்டன் பகுதியில் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 16 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
