வாழைச்சேனையில் மோட்டார் குண்டு மீட்பு
மட்டக்களப்பு- கிரான் கருங்காளியடி பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் குறித்த குண்டை நேற்றுமுன்தினம்(12.11) மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இயங்கி வந்த இராணுவ முகாம் அங்கிருந்து தற்போது வெளியேற்றப்பட்டு காணி உரிமையாளர்களிடம் காணிகளை இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதி
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட காணிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை வவுனியாவை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் மெகா (ஆயுபு) கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்பு மேற்கொண்டு வந்துள்ள நிலையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குண்டை மீட்டு அழிப்பதற்கு நீதிமன்ற நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri