வெளிநாட்டிலுள்ள உரிமையாளரின் காணியிலிருந்து மோட்டார்குண்டு மீட்பு
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேசத்திலுள்ள வீட்டு காணியில் புதைந்திருந்த மோட்டார்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (12.03.2025) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பிரதேசத்திலுள்ள முதலியார் நீதிமன்ற வீதியிலுள்ள, வெளிநாட்டில் வசித்து வரும் ஒருவரின் காணியை பராமரிப்பாளரொருவர் பராமரித்து வரும் நிலையில் நேற்று துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
இதன்போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குண்டை மீட்டு செயலிழக்க வைப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

