அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்ன? வெளிப்படையாக தெரிவித்த ஜனாதிபதி - செய்திகளின் தொகுப்பு
சரியானதைச் செய்வது பாரிய சவாலாகும், அதற்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதுடன் முன்னோக்கிப் பயணிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் இலக்கை அடைந்துகொள்ள முடியுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்தார்.
கமநலச் சேவைகள் உத்தியோகத்தர்களுடன் நேற்று பிற்பகல் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியுமென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
