யாழில் திடீரென மயக்கமடைந்த பெண் மரணம்! பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் உறுதி - செய்திகளின் தொகுப்பு
செல்லப் பிராணியான நாய் திடீரென இறந்த சோகத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் திடீரென உயிரிழந்துள்ளது. இச்சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாத குறித்த பெண் ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சாப்பிடாமல் இருந்துள்ளார்.
அவர் திடீரென மயக்கமடைந்த நிலையில், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,




