இலங்கையில் எகிறுகிறது கோவிட் பலி!! உடன் அமுலாகும் வகையில் முடக்கப்படும் பகுதிகள் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 14 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,897 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் மேலும் இரண்டு பகுதிகள் இன்று உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள்
எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri