ரஷ்யாவின் மூன்று முக்கிய தளபதிகளை சுட்டுவீழ்த்திய உக்ரைன் இராணுவம்! செய்திகளின் தொகுப்பு
உக்ரைனில் மோதல் களத்தில் முன்னணியில் படைகளை வழிநடத்தி வந்ததாக தெரிவிக்கப்படும் ரஷ்யாவின் மூன்று முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு நாடுகளின் கூற்றுப்படி, ரஷ்யாவின் 41வது ஒருங்கிணைந்த இராணுவத்தின் தளபதி, உக்ரைனிய துப்பாக்கி சுடும் வீரரால் சுடப்பட்டார்.
இது மட்டுமன்றி ஒரு படையணியின் கட்டளைத்தளபதி மற்றும் ஒரு பிராந்திய தளபதியும் சண்டையில் இறந்துள்ளனர்.
ரஷ்ய தளபதிகள் முன்னோக்கி நகரும்போதே படையின் அதிக கட்டுப்பாட்டை அவர்களால் கொண்டிருக்க முடியும்.
ஆனால், களத்தில் இப்படி செயல்படும்போது இது அவர்களுக்கு
ஆபத்தை அதிகரிக்கிறது என்று மேற்கு நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,