நம்பி ஏமாந்த மக்கள்: வரவு செலவு திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் (Basil Rajapaksa) முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களின் நலனுக்கான எதுவும் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் வருமான இழப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால் அவர்களின் அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போயுள்ளதாக கிரியெல்ல தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கும், நாட்டுக்கு முதலீடுகளை வரவழைப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்படாததற்கு எதிர்க்கட்சி வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,