எப்ஸ்டீன் கோப்புகளின் எதிரொலி பிரித்தானிய பிரதமரின் தலைம செயலாளர் பதவி விலகல்
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மரின் தலைமைச் செயலாளர் மார்கன் மெக்ஸ்வீனி பதவி விலகியுள்ளார்.
எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் தொடர்பான சர்ச்சைகளின் எதிரொலியாகவே மெக்ஸ்வீனி இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
எப்ஸ்டீன் கோப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பீட்டர் மான்டெல்சனை அமெரிக்க தூதுவராக நியமிக்க தாமே பிரதமருக்கு ஆலோசனை வழங்கியதாக மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.

பீட்டர் மான்டெல்சனை நியமித்தது தவறு. அவர் எங்கள் கட்சி, நமது நாடு மற்றும் அரசியல் நம்பிக்கையை பாதித்துள்ளார் என மெக்ஸ்வீனி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பிரதமர் ஸ்டார்மருக்கு இதை பரிந்துரை செய்ததில் முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் பதவி, பிரதமருக்கு நெருங்கிய மூத்த அரசியல் ஆலோசகர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி சோதனை (due diligence) மற்றும் முன்னெச்சரிக்கை முறைகள் இனி அடிப்படையிலேயே மாற்றப்பட வேண்டும் எனவும், இது எதிர்கால பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகவேண்டும் எனவும் மெக்ஸ்வீனி மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மெக்ஸ்வீனியின் சேவை மற்றும் தொழிற் கட்சிக்கு காட்டிய அர்ப்பணிப்புக்கு நன்றி பாராட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam