நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் 50 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள்!
இலங்கையில் வாழும் 56.8 வீதமானவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்க விருப்பத்துடன் இருப்பதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் 77.2 வீதமான இளையோர்

மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் நடத்திய புதிய கருத்து கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கை மக்களில் 41.5 வீதமானவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 77.2 வீதமானவர்கள் இலங்கைக்கு வெளியில் வேறு நாட்டில் வசிக்க விருப்பம் தெரிவித்திருப்பது மிகவும் முக்கியமான விடயம்.
30 வயதுக்கும் மேற்பட்டவர்களின் கருத்து

22 வீதமானவர்களே நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிப்பதை விரும்பவில்லை.
30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 45 வீதமானவர்கள் மாத்திரம் நாட்டில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். 52.5 வீதமானவர்கள் நாட்டில் இருந்து வெளியேற விரும்பவில்லை என கூறியுள்ளனர்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam