வடமாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 50ற்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு
வடமாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 50ற்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக வடமாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பாலச்சந்திரன் கிரிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஊடகவியலாலர்கள் 6 வயது யானை ஒன்று இறந்தமை தொடர்பில் வைத்திய அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
காடு அழிப்பு, மரம் வெட்டுதல், கருங்கல் அகழ்தல், கிரவல் அகழ்தல், மணல் அகழ்தல் என்பன காரணமாக காடுகள் அழிவடைந்து வருகின்றன.
இதன் காரணமாக காட்டு விலங்குகள் வெளியில் வருகின்றன.
வடமாகாணத்தில் 5 வருடத்தில் 50 இற்கு மேற்பட்ட யானைகள் வெங்காய வெடி காரணமாக இறந்துள்ளன.
வெங்காய வெடி காரணமாக பாதிக்கப்பட்ட யானைகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கியுள்ளோம். மனிதர்கள் சிலர் வேட்டைக்காக
வைக்கும் வெங்காய வெடி காரணமாகவே பல யானைகள் இறந்துள்ளன எனத் தெரிவித்தார்.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
