கிளிநொச்சி பகுதியில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் மீட்பு!
கிளிநொச்சி − ரம்யா வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்து கடந்த 13ம் திகதி T56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தக்கூடிய 2 பெட்டி துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அடுத்து, விசேட அதிரடி படை, குறித்த பகுதியை அகழ்வு செய்துள்ளது.
இதன்போது, T56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 750 ரவைகள் விகிதமான 84 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. T -56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 46,000 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், M60 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய 800 ரவைகளும், MPMG துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய 400 ரவைகளும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் யுத்தக் காலத்தில் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
