உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்
உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர்.
இராணுவத்திலிருந்து சட்ட ரீதியாக விலகியவர்களே இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
உக்ரைன் படையில் இணைந்து கொள்ளும் நோக்கில் ஏற்கனவே இராணுவ உத்தியோகத்தர்கள் அசர்பைஜான், டுபாய் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கெப்டன் ரானிஸ் ஹேவகேவின் விசேட படையில் இணைந்து கொள்வதற்காக இவர்கள் குறித்த நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு படையினர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தேடிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் படையில் இணைந்து கொள்ளும் வீரர்களுக்கு மாதாந்த சம்பளமாக 1 மில்லியன் ரூபா முதல் 12 மில்லியன் ரூபா வரையில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே சுமார் 20 இலங்கைப் படையினர் உக்ரைன் படைகளில் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 5 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
