ரணிலுடன் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மக்களின் வாக்கு பலம்
இந்த நிலையில், மக்களின் வாக்குப் பலம் கொண்ட மேலம் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலின் பிரசார மேடையில் ஏறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலுத்கம பிரதேசத்தில் நடைபெற்ற இளைஞர் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எனினும்,முன்னாள் அமைச்சர் மனுஷவின் இந்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri