கொரோனா தொற்றாளர்களை விட அதிகரிக்கும் மரணங்கள் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
இலங்கையில் கொரோன தொற்றாளர்கள் அதிகரித்து வரும் வேகத்திற்கு அதிகமாக மரணங்களின் வீதம் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களில் 17 மில்லியன் சனத் தொகைக்கு 17 வீதம் என்ற வகையில் மரணங்கள் அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இதுவரை 73 ஆயிரத்து 859 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 375 உயிரிழந்துள்ளனர்.65 ஆயிரத்து 644 பேர் குணமடைந்துள்ளதுடன், 6 ஆயிரத்து 155 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.




