மொரகஹகந்த நீர்த்தேகத்தில் ஆயுதங்கள் மீட்பு
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் இருந்து மீண்டும் ஆயிரத்துக்கு அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை, லக்கல, வில்கமுவ, மஹாவெல, யடவத்த மற்றும் நாவுல பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள், நேற்று (13.10.2025) தம்புள்ளை விசேட அதிரடிப்படை வீரர்கள் மற்றும் கடற்றொழில் சமூகத்துடன் இணைந்து, வெடிபெருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர் சமீபத்தில் நாவுல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கிய தகவலின்படி, 1,100 வெடிபெருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடுமையான பாதுகாப்பு
அதன்படி, மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்துகளின் எண்ணிக்கை தற்போது 2000ஐ தாண்டியுள்ளது. நேற்று கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துகளில் T-56 தோட்டாக்கள் மற்றும் ஐந்து விமான எதிர்ப்பு தோட்டாக்கள் உள்ளடங்குவதாக பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



