யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பம்(Photos)
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (30.01.2023) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
அமர்வை புறக்கணித்த மணிவண்ணன் அணி
இந்நிலையில் முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் அணியினர் சபையின் அமர்வை புறக்கணித்துள்ளது.
இதற்கமைய வரதராஜா பார்த்திபன், சட்டவிரோதமாக முதல்வர் தெரிவு இடம் பெற்றுள்ளது. எனவே இந்த விடயத்தினை தற்போதுள்ள முதல்வர் கருத்தில் எடுக்க வேண்டும் என சபையி உரையாற்றியுள்ளார்.
யாழ். மாநகர முதல்வராக இமானுவல் ஆனல்ட் உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் முதல்வராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதல்வரின் பதவியேற்பு இலங்கை அரசியலமைப்பு மற்றும் மாநகர கட்டளை சட்டங்களை மீறுவதாகத் தெரிவித்து யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் எதிர்வரும் ஆறாம் திகதி குறித்த வழக்கின் பிரதிவாதிகளை மன்றியல் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் புதிய முதல்வர் தலைமையில் மாநகர அமர்வு இடம்பெறுமா? அல்லது கூட்டம் கோரமின்மையால் நிறுத்தப்படுமா? என்ற சந்தேகங்கள் நிலவிய நிலையில் காலை 10 மணி அளவில் கூட்டம் ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பமான நிலையில் மணி அணி உறுப்பினர்கள் சிலர் முதல்வர் தெரிவு தவறானது தெரிவித்து சபையை நடவடிக்கையில் இருந்து விலகி வெளியேறினார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்கது.
எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள்
இதேவேளை எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள் என யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் முதல்வர் ஆனோல்டை நோக்கி தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் மாத அமர்வானது திடீரென்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரனால் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
முன்னாள் முதல்வரின் உடல்நிலை சரியின்மையினால் குறித்த கூட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது அவ்வாறு முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை எனில் வேறு ஒருவர் சபையினை தலைமை தாங்கி நடாத்தியிருக்க முடியும் எனவே டிசம்பர் மாதம் அமர்வு நடத்தப்படாமைக்குரிய காரணம் நமக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனகேள்வி எழுப்பினர்.
குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றும் போது எங்களை மடையர் என்று
நினைக்காதீர்கள் முதல்வர் மாத்திரம் இந்த மாநகர சபையின் உறுப்பினர் அல்ல ஏனைய
உறுப்பினர்கள் நாங்கள் இருக்கின்றோம் எங்களை மடையர் என நினைக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.



இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
