புதிய பௌத்த பிக்குகளுக்கு நேர்ந்த கொடுமை: ஓமல்பே சோபித தேரர் ஆதங்கம்
பௌத்த பிரதான பீடாதிபதிகள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து செயற்படுமாறு ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைகாலமாக விகாரைகளில் புதிய பிக்குகள் மீது தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த (23.04.2023)ஆம் திகதி புஸ்ஸல்லாவயில் உள்ள விகாரை ஒன்றில் புதிய துறவி ஒருவர் பிரசங்கங்களை ஓதத் தவறிய காரணத்தால், மூன்று மூத்த பிக்குகளால் கொடூரமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விகாரையின் பிரதம குருவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை சந்தேகநபர் யாரும் கைது செய்யப்படவில்லை.

பாலியல் துஷ்பிரயோகம்
அதேநேரம், அரநாயக்கவில் உள்ள ஒரு விகாரையில் மற்றொரு புதிய பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பிக்குகளும் நீதிமன்றினால் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விகாரைகளில் புதிய பிக்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில்
பிரதான பௌத்த பீடாதிபதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென ஓமல்பே சோபித தேரர்
வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam