பலத்த பாதுகாப்புடன் குருந்தூர்மலை நோக்கி நகரும் பிக்குகள் அணி
முல்லைத்தீவு (Mullaitivu) குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விசேட அதிரடிபடையினரின் விசேட பாதுகாப்புடன் பிக்குகள் குழுவினர் பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி தொடக்கம் மகியங்கனையிலிருந்து பாதயாத்திரை ஒன்றினை ஆரம்பித்த பிக்குகள் குழு ஒன்று இன்று (20.06.2014) முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்து முல்லைத்தீவு குருந்தூர் மலையை செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.
வீதித்தடுப்புக்கள்
இந்த பயண வழிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அளம்பில் சந்தியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதுடன் வீதி தடுப்புக்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு கடமைக்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் தென்பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து வருகை தந்த பௌத்த மக்கள் பௌத்த கொடியினை வீதியில் இரு பகுதிகளிலும் நாட்டி கூடாரங்களையும் அமைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam