சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடத்தல் தீவு கண்டல் தாவர காணிகள் விடுவிப்பு

Mannar Mrs Pavithradevi Wanniarachchi Northern Province of Sri Lanka
By Ashik Jun 20, 2024 06:58 AM GMT
Report

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு (Pavithra Wanniarachchi) வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம் விடத்தல் தீவு இயற்கை சரணாலயம் என குறிப்பிடப்பட்ட பகுதி நிறைவுக்கு வருவதாக கடந்த மாதம் 6 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 

இவ்வாறு விடத்தல் தீவு பகுதியில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் கடல்சார் பூங்கா/கடல் வேளாண்மைக்கு விடுவிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

மோடியின் விசேட செய்தியுடன் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜெய்சங்கர்

மோடியின் விசேட செய்தியுடன் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜெய்சங்கர்

தனியார் நிறுவனம்

குறிப்பாக கடந்த வாரம் இடம் பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது குறித்த காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

discharge-dubious-island-continental-lands

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கையான கண்டல் காடுகளை அழித்து கடற்றொழில் நடவடிக்கைகளை தடுத்து அமைக்கப்படும் கடல்சார் பூங்காவிற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்திருந்தார்.

அதே நேரம் கடற்றொழிலாளர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட போது இந்த 400 ஏக்கர் நிலமும் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பண்ணை அமைப்பதற்கு வழங்குவதற்காகவே விடுவிக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிட்டனர்.

வெறுமனே அதை 400 ஏக்கர் பிரச்சினையாக கருத கூடாது எனவும் அதை தொடர்ந்து விடத்தல் தீவு பகுதியோடு சேர்ந்த 1400 ஏக்கர் காணிகள் ஆபத்தில் இருப்பதாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் ஆலம் குறிப்பிட்டிருந்தார்.

நாய்களுக்கான பராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

நாய்களுக்கான பராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

வனவள திணைக்கள அதிகாரிகள்

குறித்த காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பாக தங்களுக்கு எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை எனவும் 1000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு தொடர்பில் அளவீடுகள் இடம் பெற்ற நிலையில் 400 ஏக்கராக குறைக்கப்பட்டு தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

discharge-dubious-island-continental-lands

அதே நேரம் மன்னார் மாவட்ட காணிகளுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் இது தொடர்பாக தெரிவித்த போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து மன்னார் வனவள திணைக்கள அதிகாரிகளிடமும் கொழும்பு மாவட்ட உயர் அதிகாரிகளிடமும் அறிய முற்பட்ட வேளை குறித்த அறிவித்தல் தொடர்பில் அவர்களுக்கே தெரியாத நிலையே காணப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சிங்கள மொழியிலே காணப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்ட இணைப்புகள் எதுவும் வர்த்தமானியில் காணப்படவில்லை எனவும் அதில் ஒழுங்கான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவ் வர்த்தமானி தொடர்பில் யாருக்கும் ஒழுங்கான விளக்கம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகள் வேறு எந்த உள்ளூர் நிறுவனங்களுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ வழங்காது அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அனுராதபுரத்தில் சிக்கிய மர்மம் - அணைக்குள் புதைந்திருந்த இரகசியம்

அனுராதபுரத்தில் சிக்கிய மர்மம் - அணைக்குள் புதைந்திருந்த இரகசியம்

மக்களின் வாழ்வாதாரம்

இந்த நிலையில் நேற்றைய தினம் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் விடத்தல் தீவு விடுவிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு பயன்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சால் தெரிவிக்கப்படுகின்றது.

எங்களை பொறுத்த வரையில் விடத்தல் தீவு என்பது கடலால் சூழப்பட்ட பிரதேசம் .அது பூகோள ரீதியில் பெறுமதியான பிரதேசம்.

discharge-dubious-island-continental-lands

பருவ காலத்தில் மீன் இனங்கள் அந்த பிரதேசத்திலேயே இனப்பெருக்கம் செய்து ஆழ்கடலுக்கு செல்கின்றன.

இலங்கையின் மிகப்பெரிய மீன் உற்பத்தி வங்கி அதாவது இந்த திணைக்களங்களினால் அறியப்படாத மீன் உற்பத்தி வங்கியும் இதை எமது மக்களின் வாழ்வாதாரத்துக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்துவதாக கூறி மிக பலம் பொருந்திய பல்தேசிய கம்பெனிகளுக்கு மக்கள் என்ற போர்வையில் மக்களை பினாமியாக வைத்து விற்பனை செய்வதற்கான மறைமுகமான திட்டமாகத்தான் இது இருப்பதாக அகில இலங்கை கடற்றொழில் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தப்பட்ட அமைச்சாலோ அமைச்சராலோ வழங்கப்படாத நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க வேண்டாம் எனவும் அவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரி விரைவில் விடத்தல் தீவு மக்களால் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரிக்கு நிரந்தர பீடாதிபதியை நியமிக்க வலியுறுத்தும் கஜேந்திரன் எம்.பி

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரிக்கு நிரந்தர பீடாதிபதியை நியமிக்க வலியுறுத்தும் கஜேந்திரன் எம்.பி

இலங்கைக்கு உதவியளிக்க சீனா எப்போதும் தயார்

இலங்கைக்கு உதவியளிக்க சீனா எப்போதும் தயார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US